திருவண்ணாமலை திருக்குடை உபய யாத்திரை காஞ்சிபுரம் வருகை – ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்பு.
இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட் தமிழ்நாடு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு திருக் குடை வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் 12 ஆம் ஆண்டு திருக்குடை உபய யாத்திரை கடந்த 22 ஆம் தேதி வட திருமுல்லைவாயில் கொடியுடைய அம்மன் உடனாகிய மாசிலாமணிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து புறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு காஞ்சிபுரம் வருகை புரிந்து அண்ணாமலையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆழ்வார் பங்களாவில் இருந்து புறப்பட்டு பல்வேறு சிவாலயங்கள் வழியாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டது.
சிவத்திரு டாக்டர். லிங்கேசன் ஐயா அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை தாயாருக்கும் இந்த கொடை சமர்ப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக குடைகளை எடுத்துச் சென்றனர்.


