காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் பொன்மொழி நினைவு தினம் அனுசரிப்பு
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் திரு.சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் ரயில்வே சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச் செல்வர் திரு.சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் மகனும், கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சி.வி.எம்.பி.எழிலரசன், அவர்களின் தந்தையும், காஞ்சி தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவருமான சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம், இரயில்வே சாலையிலுள்ள காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்தில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் C.V.M.A. சேகரன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகரச் செயலாளர் டி கே வி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் முத்து செல்வம், நிர்மலா, பகுதி செயலாளர் திலகர் வெங்கடேசன், பகுதி துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், மாநகராட்சி வழக்கறிஞர் சிவக்குமார் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலக்குடி குமார், ஒன்றியசெயலாளர் p.m.குமார், தொழிற்சங்க தலைவர் இளங்கோவன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்
உள்ளிட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான கழகத்தினர் (ம) சி.வி.எம். குடும்பத்தினர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, காலை 11.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரிலும், 11.30 மணியளவில் பூக்கடை சத்திரம் அருகிலும் ஏழை, எளியோருக்கு பசியாற்றும் நிகழ்வு நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நன்றிகளை தெரிவித்தார்.

