காஞ்சிபுரம் ஶ்ரீ சங்கடஹர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி மகாற்சவம்
காஞ்சிபுரம் ஶ்ரீ சங்கடஹர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி மகாற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி என்பது அனுமன் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்துப் பண்டிகை.
இது மார்கழி மாத அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் இணைந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள கார் வண்ண பெருமாள் ஆலயத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சங்கர ஹர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு தீப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களும் அன்னப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


