காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் சங்கத்தின் சார்பில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கங்கள், மற்றும் காஞ்சிபுரம் அண்ணா தொண்டு அறக்கட்டளை இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை மாபெரும் பேரணி மிக சிறப்பாக நடைபெற்றது.
உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா ஸ்ரீநிவாச ராவ் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பேரணியை நிறைவு செய்து சிறப்பு ஆற்றினார்.
இதில் அண்ணா லயன்ஸ் சங்கத் தலைவர் லயன்ஸ் கிருபாகரன், செயலாளர் முரளிதரன், பொருளாளர் உமாபதி மற்றும் மண்டல தலைவர் குமரேசன், வட்டாரத் தலைவர் பூபதி உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த நமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் அண்ணா லயன் சங்கத் தலைவர் கிருபாகரன் நன்றிகளை தெரிவித்தார்.


