காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பஜனை
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உலக மக்கள் நன்மை கருதி, ஸ்ரீ காஞ்சி காமகோடி வித்யா மண்டலி சார்பில் சிறப்பு பஜனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரமட வளாகத்தில் சங்கராச்சார சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் உலக மக்கள் நன்மை கருதி ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ காஞ்சி காமகோடி வித்யா மண்டலி சார்பில் சிறப்பு பஜனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் நிர்மலா வேணுகோபாலன் தலைமையில் சிறப்பு பஜனை நடைபெற்றது. இதில் குரு கீர்த்தனைகள் விநாயகர் முருகன் அம்பாள் உள்ளிட்ட பக்தி பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சங்கர மடம் சார்பில் இவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பாராயணம் நடைபெற்றது. இதில் வரும் நாட்களில் தொடர்ந்து இந்த பாராயணம் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற மஹா பெரியவரிடம் பிரார்த்தனை வைக்கப்பட்டது.


