காஞ்சிபுரத்தில் சேகர் பிறந்தநாள் விழா: அன்னதானம் வழங்கி விமரிசை
காஞ்சிபுரத்தில் முன்னாள் நகராட்சி தலைவர் சேகர் பிறந்தநாள் விழா – அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

சத்திரம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு அன்னதானம்
காஞ்சிபுரத்தில் முன்னாள் நகராட்சி தலைவரும், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளரும், வன்னிய குல சத்திர சங்கத் தலைவருமான சேகரின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்திரம் பகுதியில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னதானத்தை தொடங்கி வைத்த அதிமுக மாவட்ட செயலாளர்
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

வன்னியர் குல சங்க செயலாளர் முத்துசெல்வம், பொருளாளர் அருள், ஞானம், ஆதித்யா, கிருபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சேகருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் அதிமுக மாநகர பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பூக்கடைச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சேகருக்கு மலர் மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சிறப்பாக நடைபெற்ற விழா
பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி, அருள், ஜெயக்குமார், J.S. துஷ்யந்த், சைலேஷ், நவீஸ், தஸ்வின் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


