காஞ்சிபுரம் பாஜக சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு தீபம் ஏற்றி மௌன அஞ்சலி
காஞ்சிபுரம் பாஜக சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு தீபம் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே பாஜக மாநகர மேற்கு மண்டல் சார்பில், மேற்கு மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களுக்கு தீபம் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் கலந்து கொண்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.

இதில் மாவட்ட துணை தலைவர் அதிசயம் குமார், ஓம் சக்தி பெருமாள், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பீரோ பழனி, ஆலயம் மற்றும் ஆன்மீகம் பிரிவு தலைவர் காமாட்சி ஆறுமுகம், இளைஞர் அணி மாவட்ட தலைவர் விக்னேஷ் ரூபன் குமார், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் எஸ்.கே.பி.எஸ். சதீஷ், பூக்கடை வெங்கடேசன், மேற்கு மண்டல் பொதுச் செயலாளர் தியாகு, பொருளாளர் ஜெயசித்ரா, துணைத் தலைவர் மோகன், செயலாளர் பவானி, மகளிர் அணி நிர்வாகிகள் கோகிலா, மங்கை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


