காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் வெடி வெடித்து கொண்டாட்டம்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகஅதிக இடங்களை பிடித்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து ஓரிக்கை, காந்தி சாலை, மற்றும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மாநில ஓபிசி அணி துணைச் தலைவர் செந்தில்குமார் சட்டமன்ற பொறுப்பாளர் ஜம்போ டை சங்கர் மாவட்ட துணைத் தலைவர்கள் அதிசயம் குமார், வாஞ்சிநாதன் பல்வேறு பிரிவு மாவட்டத் தலைவர்கள் காமாட்சி, ஆறுமுகம், பீரோ பழனி, மாநகர மண்டல் தலைவர்கள் ஜெயபிரகாஷ், தனலட்சுமி, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் துணைத்தலைவர் பாரதிராஜா, கிளைத்தலைவர் நாகராஜன், பூக்கடை ஆர் ஜி வெங்கடேசன், யோகேஸ்வரன், கேசவன், ஜெயசித்ரா, பவானி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

