பாஜக மாநில தலைவர் காஞ்சிபுரம் வருகை : சிறப்பான வரவேற்பு அளித்த நிர்வாகிகள், தொண்டர்கள்
ஞ்சிபுரத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் வருகை; மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் நடைபயணம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் வருகை புரிந்த மாநில தலைவருக்கு மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை கிராம சபை கூட்டத்தில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு திரு வாஜ்பாய் அவர்களின் திருஉருவ சிலையை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து மேற்கு ராஜ வீதியில் சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஓம் சக்தி, பெருமாள், வாஞ்சிநாதன், கூறும் விஸ்வநாதன், ஜீவா, செந்தில்குமார், மாலதி, அஞ்சனாதேவி, அரசன், மாவட்ட செயலாளர்கள் சாந்தலட்சுமி, செந்தில், தனபால், சுபாஷ் சந்திரபோஸ், சக்தி, ரோஜா, வீரா என்கின்ற வீரபத்திரன், ராஜ்குமார், சிபி பொதுச் செயலாளர் எல் எம் ஆர் பத்மநாபன், மாநகர மண்டல் தலைவர்கள் தனலட்சுமி, ஜெயபிரகாஷ், மாவட்ட அணி மற்றும் பிரிவு பொறுப்பாளர்கள் காமாட்சி ஆறுமுகம், வி ஜீவானந்தம், சரவணன், மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் செந்தில்குமார், அதிமுக மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், கிழக்கு பகுதி செயலாளர் பாலாஜி, கோல்ட் ரவி ஜெயராஜ், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் திலக் குமார், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் மற்றும் மாநில ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




