வாலாஜாபாத்தில் பாஜக ஜிஎஸ்டி 2.0 வரி குறிப்பு விளக்க பொது கூட்டம்

‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்ற பாரதியாரின் கற்பனையை நிஜமாக்கியவர் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று வாலாஜாபாத்தில் பாஜக ஜிஎஸ்டி 2.0 வரி குறிப்பு விளக்க பொது கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆவேச உரை ஆற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் சார்பாக 2.0 ஜிஎஸ்டி வரி விளக்க பொதுக்கூட்டம் பாஜக வாலாஜாபாத் கிழக்கு மண்டல தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் ஊ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் துணைத் தலைவர்கள் ஓம் சக்தி பெருமாள் வாஞ்சிநாதன் அதிசயம் குமார். மாநில ஓபிசி அணி துணை தலைவர் செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளர் அமர்நாத், நெசவாளர் அணி ஒருங்கிணைப்பாளர் வஜ்ரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கே.செல்வம், மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார்,வீரா, முன்னாள் மாவட்ட செயலாளர் பிரபுராஜ் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர் ஊ.ஜெகதீசன் ஆவேச உரையாற்றும் போது, “பிற நாடுகளை சார்ந்திருப்பது அசிங்கம் என்று மக்களுடைய தன்மானத்தை தட்டி எழுப்பியது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்றும், நாம் நம் விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி நாம விற்கலாம், நம்ம நம்முடைய நெசவுப் பொருட்களை மதிப்பு குட்டி விற்கலாம், நாமே அதை கொள்முதல் செய்வோம் இதைத்தான் அன்றே பாரதி பாடினார். ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்ற அந்த கற்பனையை நிஜமாக்கி கொண்டிருப்பவர் நம் பிரதமர் நரேந்திர மோடி” என பெருமிதம் தெரிவித்தார்.
இதில் மாவட்ட மண்டல் பார்வையாளர்கள் ஜம்போடை சங்கர், வீரபத்திரன், சக்தி ரோஜா, சாந்தலட்சுமி ஜீவா செந்தில்குமார், சோழனூர் ஏழுமலை, காஞ்சிபுரம் மேற்கு மண்டல் தலைவர் தனலட்சுமி, மகளிர் அணி நிர்வாகிகள் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் பாலமுருகன் நன்றிகளை தெரிவித்தார்.

