உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் ஆலயம் அருகே கொண்டாட்டம்
காஞ்சிபுரம் ஆலயம் அருகே 16 வது வார்டு திமுக கழகம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி வட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மாநகர செயலாளர் பரிந்துரையின்படி பல்வேறுபாடுகளில் சிறப்பாக நடைபெற்றது.
அந்த வகையில் கச்சபேஸ்வரர் கோவில் அருகே 16 வது வார்டு சார்பில் வட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி முன்னிலை வகித்தார். இதில் வட்ட பிரதிநிதிகள் கண்ணன், பாரி, இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



