காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகர் என்கிற சரஸ்வதி விஸ்வ மகா வித்தியாலயா பல்கலைக்கழக வளாகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் புதுமை மற்றும் தொழில் முனைவுத்திறன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்துதல் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண அனுகிரகத்துடன் நடைபெற்ற இதில் பொறியியல் துறை டீன் பேராசிரியர் முனைவர் ரத்தினகுமார் வரவேற்புரை ஆற்றினார். சார்பு துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஆர்.வசந்தகுமார் மேத்தா தலைமை உரையாற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்று வரும் இஸ்ரோ விஞ்ஞானி மான டாக்டர் சிவதான பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் முனைவர் செந்தில்குமரன் நன்றி உரையாற்றினார். கருத்தரங்கில் கணினி துறையின் பேராசிரியர்கள் சுந்தர் லட்சுமிபாய் முனைவர் பூவ வராகன் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *