காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மனு தாக்கல்

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சென்னை சத்தியமூர்த்தி பகுதியில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக காந்தி சாலையில் அமைந்துள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து புறப்பட்டனர்.

இதில் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர் சீனிவாச ராகவன், மாநில நிர்வாகிகள் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, லியாகத் ஷெரிப், சங்கரலிங்கம் மாநகர தலைவர் நாதன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பூப்படை மணிகண்டன், பகுதி செயலாளர் பார்த்தசாரதி, காமராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் டிபி சீனிவாசன், வஜ்ரவேல், மூத்த காங்கிரஸ் தலைவர் சுமங்கலி சீனிவாசன், வட்டார தலைவர் பிச்சாண்டி, யோகி, மோதிலால், பூந்தோட்டம் பழனி, மகேந்திரன், கந்தசாமி, வையாவூர் லோகு, பிள்ளையார்பாளையம் obc. பாலமுருகன், கணேசன், முத்து கணேசன், எல் வி குமார், டில்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் SC/ST R. கன்னியப்பன் அவர்கள் சென்னை காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த போது உடன் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் தாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

