வாக்கு திருட்டு விவகாரம்: காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்
வாக்கு திருட்டு விவகாரம்: காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறி கையொப்ப இயக்கம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் பிரச்சார விழிப்புணர்வு கையொப்ப இயக்கம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார விழிப்புணர்வு கையொப்பை இயக்கத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களிடம் வாக்கு திருட்டை கண்டித்து கையொப்பங்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், தாம்பரம் நாராயணன், முன்னாள் மாவட்ட
தலைவர் வழக்கறிஞர் ஜி வி மதியழகன், மாநகரத் தலைவர் நாதன், மாநில நிர்வாகிகள், எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொதுச் செயலாளர் கன்னியப்பன், லியாகச் ஷெரிப், பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் நிக்கோலாஸ், ரா.ஐயப்பன், மாவட்ட துணைத் தலைவர் தாரன், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் தங்கராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் குருராஜ் தாடி கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கதிரவன், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமங்கலி சீனிவாசன் லைன். குப்புசாமி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் டி பி சீனிவாசன், ஓ பி சி தொகுதி தலைவர் பாலமுருகன், பூந்தோட்டம் பழனி இளைஞரணி யோகி. அனீஸ், மாநகர பகுதி தலைவர்கள் சப்தகிரி காமராஜ், பட்டு காமராஜ் பார்த்தசாரதி, செவிலிமேடுபிரபு, EB. அஜி. கலீல் பாய், தணிகா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

