தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், உத்திரமேரூர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், உத்திரமேரூர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் நேர்காணல் ஐந்து பேர் கொண்ட ஆய்வு குழு சார்பில் நேர்காணல் நடைபெற்றது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள கூட்டரங்கில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மாவட்டத் தலைவர் எஸ் ஏ அருள்ராஜ் தலைமையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் எஸ் ஏ அருள்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் நேர்காணல் செய்தனர். இதில் 5 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நேர்காணலில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன் குமரகுருநாதன் சடையாண்டி, காலித் அகமது, பத்மநாபன், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆதி கேசவன் தேவராஜ் பாலுசாமி சுமித்ரா பாய், சுகுமார் ஆகியோர் நேர்காணலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *