சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காஞ்சிபுரம் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் விருப்ப மனு
காஞ்சிபுரம் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் தாடி கா. கார்த்திகேயன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு சென்று விருப்ப மனு அளித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் சார்பில் பல்வேறு தரப்பினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்பம் மனு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் காமராஜர் சிலைக்கு வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் தாடி கா. கார்த்திகேயன் மாலை அணிவித்து புறப்பட்டார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கதிரவன் தலைமையில் வெடி வெடிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டு புறப்பட்டனர்.
இதில் மாநகர தலைவர் நாதன் முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அறந்தை பிரகாஷ், கணபதி, கோ. கார்த்திகேயன், சேட்டு என்கின்ற லட்சுமி காந்தன், ஓ பி சி பாலமுருகன், இளைஞர் அணி யோகி, டேவிட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


