காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் வாக்கு சேகரிப்பு!

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியான பிள்ளையார்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, சாதிக் பாஷா, மகேந்திரன், திமுக பகுதி செயலாளர் தசரதன், திலகர் சந்துரு, வெங்கடேசன், காங்கிரஸ் மாநகரத் தலைவர் நாதன், சுகுமார், இளைஞர் அணி யோகி, பகுதி தலைவர்கள் காமராஜ், லோகநாதன், பாலமுருகன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தலைவர் அருள்நாதன் மதி ஆதவன், ரமேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

