காஞ்சிபுரத்தில் CVM அண்ணாமலையின் 109வது பிறந்த நாள் விழா: திமுக முன்னோடிளுக்கு நிதியுதவிகள்

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம்.அண்ணாமலையின் 109வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக முன்னோடிகளை கொண்டாடும் விழா, மேளத்தாள வாத்தியங்கள் முழங்க ஒலிமுகமதுப்பேட்டை பகுதியில் திமுக முன்னோடிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று வேட்டி சேலை, லுங்கி, பெட்சீட், பிளாஸ்க், குடை, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட 15வகையான பொருட்கள் அடங்கிய பெட்டகம் பழக்கூடை மற்றும் நிதியுதவியினை வழங்கி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் துவக்கி வைத்தார்.
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலையின் 109வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள காஞ்சிபுரம் மாநகரத்தின் அனைத்து வட்டங்களிலும், காஞ்சிபுரம் ஒன்றியம், வாலாஜாபாத் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள கழக முன்னோடிகளை போற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 200 கழக முன்னோடிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று, வேட்டி சேலை, லுங்கி, பெட்சீட், பிளாஸ்க், குடை, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட 15வகையான பொருட்கள் அடங்கிய பெட்டகமும், பழக்கூடையும், மற்றும் நிதியுதவினை வழங்கி, கழக மூத்த முன்னோடிகளை கொண்டாடும் விழா நடைபெறுகிறது.

அதையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி 1-வது வட்டம், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் மேளத்தாளங்கள் முழங்க திமுக நிர்வாகிகளுடன் காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் ஊர்வலமாக திமுக கழக முன்னோடிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களுக்கு பெட்டகம், பழக்கூடை மற்றும் நிதியுதவியினை வழங்கி இவ்விழாவினை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகரில் ஒவ்வோரு வட்டத்திலும் உள்ள திமுக கழக முன்னோடிகளின் வீட்டிற்கே திமுக நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் நேரடியாக சென்று பெட்டகம், பழக்கூடை மற்றும் நிதியுதவியினை வழங்கி அவர்களின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார்.



இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், படுநெல்லி பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,
மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், பகுதி கழக செயலாளர் திலகர், துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் வினோத்குமார் தனலட்சுமி, வட்டச் செயலாளர்கள் சண்முகம், செந்தில், பூக்கடை சந்தானம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

