காஞ்சிபுரத்தில் கலைஞர் நினைவுநாளை முன்னிட்டு அறுசுவை விருந்து
காஞ்சிபுரத்தில் தி மு க மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாளை ஒட்டி அன்னாரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெருவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் வி எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் தலைமையில் அண்ணாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதில் மாநகரச் செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் திலகர், வட்டச் செயலாளர் மண்டி சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குமரன், வழக்கறிஞர் அரவிந்த் குமார், விஜயா புருஷோத்தமன், கீதா மயில் வாகனம்,
வட்டப் பிரதிநிதி முனியாண்டி விலாஸ் சரவணன், ரமேஷ், பத்மநாபன், இளைஞர் அணி மனோஜ் குமார், முரசொலி காந்தி, சி.எம். சீனிவாசன், பழனிவேல் ராஜன், 14 வது வட்ட மாமன்ற உறுப்பினர் குமரவேல், பள்ளம்பாக்கம் குணசேகரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் அறுசுவை பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.

