துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் வருகை. ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு

தமிழக முதலமைச்சரின் மனைவி மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்திற்கு வருகை தந்தார்.
பூரண கும்ப மரியாதை உடன் ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
மணிமண்டபத்தின் முன்பாக நின்றிருந்த தர்மபுரம் ஆதீனத்தின் யானைக்கு பழங்கள் கொடுத்து யானையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
துர்கா ஸ்டாலினுக்கு ஓரிக்கை
மணிமண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் மணி மண்டபத்தின் கட்டிட சிறப்புகளை விளக்கி கூறினார்.
இதனை தொடர்ந்து மணிமண்டத்தில் உள்ள மகா பெரியவர் சுவாமிகளை தரிசனம் செய்தார்.
பின்னர் தங்கத்தேர் வெள்ளோட்டம் தொடர்பான யாகசாலை பூஜைகளை தொடங்கி வைத்து வழிபட்டார்.
இதன் தொடர்ச்சியாக தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இந்த நிகழ்வின் போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், காஞ்சிபுரம் மேயர் எம் மகாலட்சுமி யுவராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், மற்றும் தங்கத்தேர் செய்த ஏகாம்பரநாதர். இறை பணி அறக்கட்டளையின் நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியம், உறுப்பினர்கள் வலசை ஜெயராமன், பத்மநாபன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.


