காஞ்சிபுரம்ஏகாம்பரநாதர் ஆலயத்தில் சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குகாட்சி

காஞ்சிபுரம்ஏகாம்பரநாதர் ஆலயத்தில் சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குகாட்சி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரம் நகர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் காலை சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இவ்விழாவை ஒட்டி தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் மாநில பொது செயலாளர் கே சரஸ்வதி தலைமையில் மற்றும் பாலாஜி ஹேமலதா ஜெயந்தி ஆகியோர் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கே என் மூர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், நகர பிரிவு அலுவலர் கணேசன் ரங்கன், நகரப் பிரிவு துணை அலுவலர் ஸ்வதா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் எ வேலுமணி ராஜவேலு விவேகானந்தா, அனைத்து உடல் உறுப்பு கட்டுமானம் நலச்சங்கம் வெளியூர் கருணாகரன், காஞ்சிபுரம் ஆன்லைன் சிட்டி மாவட்டத் தலைவர் லைன்.தணிகாசலம் மற்றும் சங்க நிர்வாகிகள் பாபு, சீனிவாசன், சிங்காரவேலன், சத்தியா, கவிதா, கலையரசி, உஷா, சிந்து, மோகனலட்சுமி, சாந்தி மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இன்று அன்னதானத்தை சிறப்பான முறையில் நடத்தி வைத்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் இணைந்து சிறப்பாக செய்திருந்தது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *