காஞ்சிபுரம்: டாக்டர் கலைஞர் பவள விழா மாளிகையில் இலவச கண் பரிசோதனை முகாம்
காஞ்சிபுரம் டாக்டர் கலைஞர் பவள விழா மாளிகையில் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சர்மிளா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் டிகே நம்பி தெருவில் உள்ள டாக்டர் கலைஞர் பவள விழா மாளிகை வளாகத்தில் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் 24 வது வார்டு மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஷர்மிளா சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
இதில் கண்புரை, நீர் அழுத்தம், கண் எரிச்சல், தூரப்பார்வை, கிட்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்டச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமினை லிங்கேஸ்வரன் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தார்.


