காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த 16 குழந்தைக்கு தங்க மோதிரம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பிறந்த 16- குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆ யுவராஜ் வரவேற்பு பேசினார். மாவட்ட செயலாளர் க சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்பி க . செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் , பகுதி செயலாளர்கள் சந்துரு திலகர் வெங்கடேசன், தசரதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ் சஞ்சய் காந்தி ஆண்டோ சிரில் ராஜ், மாநகரை இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமார், 1வது பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பழனி மற்றும் நிர்வாகிகள் இளம்பரிதி சரவணன் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


