காஞ்சிபுரம் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய குருபூஜை
காஞ்சிபுரம் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ருத்ர பசுபதி நாயனார் குருபூஜை ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சேக்கு பேட்டை சாலியர் தெற்கு தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ருத்ர பசுபதி நாயனார் குருபூஜை விழா புரட்டாசி அஸ்வினி நட்சத்திரத்தில் நடைபெற்றது.
உலக மக்கள் நன்மைக்காகவும் அனைத்து ஜீவராசிகளும் நோய் நொடியின்ற வாழ்வு பெறவும் வேண்டி இந்த சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்ரீ ருத்ர பாராயணம் ஜெபம் மற்றும் ஸ்ரீ கேதார கௌரிஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலலன சங்கம், காஞ்சி சிவன் அடியார் திரு கூட்டம், ஸ்ரீ சரஸ்வதி ஜவுளி ஸ்டோர் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற்று சென்றனர்.

