காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
 
					காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பொய்யாமொழி வரவேற்புரையாற்றினார். இதில் மாநில தலைமையிட செயலாளர் சுப்பிரமணி, மகளிர் அணி செயலாளர் ஹேமலதா, மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன், மகளிர் அணி செயலாளர் ரேவதி, மாவட்ட தலைமைச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மதிப்புரு தலைவர் ராதாகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

“அனைத்துப் பள்ளிகளுக்கும் அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நியமன செய்ய வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றிகளை தெரிவித்தார்.


 
			 
			 
			 
			 
			