காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மாநில வர்த்தக அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம்சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை மிதிவண்டி சலவை பெட்டி, புடவை வேஷ்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் சிறப்பு அன்னதானமும் வழங்கினார்கள்.

இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், மாநகர செயலாளர் சி. கே. வி. தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுதா என்கின்ற சுப்ராயன், குமரவேல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, மகளிர் அணி நிர்வாகிகள் தனலட்சுமி, விஜயா, கீதா, வட்டச் செயலாளர் மண்டி சம்பத் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

