காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் பொதுக்கூட்டமைப்பு குறித்த சான்றிதழ் படிப்பின் தொடக்க விழா
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சான்றிப்பு ஆணையமான இமுத்ரா நிறுவனத்துடன் இணைந்த டிஜிட்டல் பொதுக்கூட்டமைப்பு குறித்த சான்றிதழ் படிப்பின் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலக கூட்டரங்கில் நடைபெற்றது.
விழாவில் பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் வசந்தகுமார் மேத்தா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஸ்ரீநிவாசு அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.
விழாவில் இமுத்ரா நிறுவனத்தின் இணை நிறுவனரும் செயல்பாட்டுத் துணைத் தலைவருமான திரு கவுசிக் சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிஜிட்டல் கட்டமைப்பு கல்வியை பிரதான கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கையொப்பம் குறித்த சிறப்பு உரையாற்றினார்.
இதில் இமுத்ரா நிறுவனத்தின் சி எஸ் ஆர் head திருமதி லட்சுமி கவுசிக் அவர்கள் டிஜிட்டல் கல்வி அறிவு சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார் விழாவில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்து மாணவர்களுடைய கலந்துரையாடினார்கள்.
விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பல்கலைக்கழக கணினி மைய இயக்குனர் பேராசிரியர் முனைவர் பாலச்சந்திரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

