காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய தங்க நகைகள், தங்க முதலீட்டு திட்டத்தின் கீழ் ஒப்படைப்பு
 
					காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் 53 கிலோ 386 கிராம் எடையுள்ள தங்க நகைகள் தங்க முதலீட்டு திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலை துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநீர் துறை அமைச்சர் ஆர் காந்தி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகபாபு ஆகியோர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதி அரசர் துரைசாமி ராஜு அவர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில், குன்றத்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் திருக்கோவில், திருமலை வையாவூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் ஆகிய நான்கு கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீடு செய்யும் திட்டத்தின் கீழ் முதலீடுசெய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காமாட்சி அம்மன் ஸ்ரீ காரியம் சுந்தரேஸ அய்யர் தலைமையில் அமைச்சர் காந்தி மற்றும் சேகர்பாபு, பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன், சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர் கே ஆர் வெங்கடேசன், அறநிலை துறை அதிகாரிகள், வங்கி நிர்வாகிகள், ஆலய ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் நன்றிகளை தெரிவித்தார்.