காஞ்சிபுரம் யோக காளீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கூழ் வார்த்தல் திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள கீரனூர் கிராமத்தில் ஸ்ரீ மம்மள காளி உடனாகிய யோக காளீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கூழ் வார்த்தல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள கீரனூர் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மங்கள காளி உடனாகிய யோக காளீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் காலை கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அழகு குத்திக் கொண்டும், பூ கரகம், நெருப்புச் சட்டி, பால் குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வளம் வந்து ஆலயத்தில் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடும் செய்தனர்.

இதனை தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆலய தர்மகர்த்தா திருமதி அன்புஜம்பால் ஸ்ரீ ஹரி கிருஷ்ண ஸ்வாமிகள் ஆலய பூஜகர் தேவராஜ் சிவம் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

