காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் மண்டை விளக்கு பூஜை
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் மண்டை விளக்கு பூஜை 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் தலை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் வகையில் மண்டை விளக்கு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலை சம்பந்தப்பட்ட தலைவலி, கண்வலி, தொண்டை வலி, மூக்கு வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் தீரும் வகையில் மண்டை விளக்க பூஜை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் முதல் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மண்பாண்டத்தில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்தவாறு ஆலய வளாகத்தில் வளம் வந்து சிவபெருமானை பிரார்த்தனை செய்து தங்களின் நேர்த்தி கடனை சமர்ப்பித்தனர்.
இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற்று சென்றனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் திவ்யா, மேலாளர் சுரேஷ் ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிறப்பான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

