காஞ்சிபுரத்தில் கர்நாடகா விவசாயத்துறை அமைச்சர் ஆன்மீக பயணம்

காஞ்சிபுரத்தில் கர்நாடகா விவசாயத்துறை அமைச்சர் ஆன்மீக பயணம்

கர்நாடகா விவசாயத்துறை அமைச்சர் சலுவராயசாமி ஒரு நாள் பயணமாக பெங்களூரு இருந்து தனி ஹெலிகாபர் மூலமாக காஞ்சிபுரம் ஆன்மீக பயணமாக வந்தடைந்தார். பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இருந்து கார் மூலமாக காந்தி சாலையில் உள்ள கர்மவீரர் காமராஜர் திருவருள் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  

தொடர்ந்து காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில்  சங்கரமடம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாக மூலமாக சிறப்பான வரவேற்பு அளித்து பிரசாதங்களும் புகைப்படமும் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

பின் செய்தியாளரை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மக்கள் நண்பர்கள் ஆனால் இரு மாநிலத்திற்கும் தண்ணீர் பங்கீட்டில் தான் பிரச்சனை, காவிரி ஆற்றில் இடையே அணை கட்டுவது குறித்து நீதிமன்ற உத்தரவு பின் அணை கட்டுவது குறித்து பரிசீலனைக்கப்படும்.”

“பீகார் தேர்தலில் தேர்தலுக்குப் பின் கருத்துக்கணிப்பில் சரியான முடிவாக இருக்காது இன்னும் மூன்று நாள் காத்திருந்தால் என்ன முடிவு என தெரிய வரும் SIR குறித்து காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் அறிவுறுத்தல் படி கர்நாடக மாநிலத்தில் பின்பற்றி வருகிறோம். இந்த ஆண்டு கர்நாடகா அணையிலிருந்து தமிழகத்திற்கு 200 மடங்கு அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.”

“4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை குறைவாக இருந்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது, இது கர்நாடகாவின் பிரச்சனை அல்ல இயற்கையின் பிரச்சனை” என கர்நாடக மாநில விவசாய துறை அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி வி மதியழகன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், மாநகரத் தலைவர் நாதன், வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குருராஜ், லோகநாதன் பிரபு, தென்னேரி சுகுமார், ராதாகிருஷ்ணன், பகுதி தலைவர்கள் காமராஜ் பட்டு காமராஜ், முத்து கணேஷ் பூந்தோட்டம் பழனி, மோதிலால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *