காஞ்சிபுரம் ஸ்ரீசெல்வ விநாயகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அடுத்த விநாயகர் புரத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய ஜர்னோதரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு யாகசாலை பூஜை, குடும்ப புறப்பாடு நடைபெற்று மூலவர் விநாயகர் மற்றும் மூலவர் விமானம் ஆலயத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்திற்கு சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் அம்மனை வழிபாடு செய்து அருளை பெற்று சென்றனர்.
விழா ஏற்பாடுகளை விநாயகபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

