காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீவரசக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மடம் தெரு சுந்தரி அவென்யூவில், அமைந்துள்ள “நினைத்தது கைகுடுக்கும்
அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய” அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலய வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு நேற்று மஹா சுணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், கோ பூஜை, நவக்கிரஹ ஹோமம்,முதலாம் கால பூஜைகள் முடிவுற்று, இன்றைய தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹீதி,மஹா தீபாரதனை நடைபெற்றுது.
பின்பு யாக சாலையில் இருந்து பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி, மேளத்தாளங்கள் முழங்க, மங்கள இசை இசைக்க விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரந்தங்களை ஓத விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்று.

அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மீது கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது.
பின்பு ஸ்ரீ வரசக்தி விநாயகருக்கு மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயக பெருமானை ஏராளமான பக்தர்கள் மனமுருகி வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் மற்றும் அருட் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் மற்றும் மடம் தெரு,சுந்தரி அவென்யூ தெரு அன்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


