காஞ்சிபுரத்தில் மகா பெரியவர் தியான மண்டப ஆரம்ப பூஜை

காஞ்சிபுரத்தில் மகா பெரியவர் தியான மண்டப ஆரம்ப பூஜை

காஞ்சிபுரத்தில் மகா பெரியவர் தியான மண்டபம் மற்றும் மகா பெரியவரின் விஸ்வரூப திருக்கோவில் திருப்பணி ஆரம்ப பூஜையும் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் அடுத்த அக்ரகாரம் வளாகத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் நகர் பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவர் தியான மண்டபம் மற்றும் ஸ்ரீ மகா பெரியவரின் விஸ்வரூப திருக்கோவில் திருப்பணி ஆரம்ப பூஜை துவக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கோலாலம்பூர் சித்சக்திபீடத்தின் சுவாமிஜி திருமதி அஞ்சலி முகுல் கட்கில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மகா பெரியவருக்கு புஷ்பாஞ்சலி செய்து விழாவினை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீராமஜெயம் எழுதி புண்ணிய தேடும் புத்தகங்களும் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர் மற்றும் காஞ்சி சௌமியாவரதன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *