காஞ்சிபுரத்தில் தமிழகக் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் வெள்ளி விழா மாநாடு
காஞ்சிபுரத்தில் தமிழகக் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் வெள்ளி விழா மாநாடு மாவட்ட தலைவர் ஆர். கோவர்தனன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆபரேட்டர்கள் சார்பில் வெள்ளிவிழா மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆர். கோவர்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாவட்ட செயலாளர் கர்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக நிறுவனத் தலைவர் டாக்டர் பி . ஷகிலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆபரேட்டர்கள் சார்பில் பொன்னாடைகள் மலர்மாலைகள் மற்றும் அணிவித்து கலச மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் அனைத்து ஆபரேட்டர்களும் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இதில் காஞ்சிபுரம் தாலுக்கா கிழக்கு பகுதி தலைவர் ஜானகிராமன், செயலாளர் பிரபு, பொருளாளர் செந்தில் குமார், மேற்கு பகுதி தலைவர் சையத் நசீர், செயலாளர் நாகராஜ், பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.



தங்களின் குடும்பத்துடன் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆபரேட்டர்கள் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் நேசகுமார் நன்றிகளை தெரிவித்தார்

