காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் அடுத்த சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு, மருத்துவர் ஷன்மா, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் 317 பேர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துரில் உள்ள சங்கரா பன்நோக்கு மருத்துவனையில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 317 பேர் பங்கேற்றனர்.

சங்கரா பன்நோக்கு மருத்துவமனை, என்.ஐ.சி.பி., மெட்ராஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹூன்டாய் பவுன்டேஷன் சார்பில் நடந்த இம்முகாமில், இதில், பெண்களுக்கான ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் ரத்த அளவு, கண், யூரின் ஆல்புமின், மார்பகம், கர்ப்பபை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டு, மாதவிடாய் பிரச்னைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கான இருதய துடிப்பு, இ.ஜி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. சுகபிரசவத்திற்கான எளிய முறையிலான உடற்பயிற்சி பயிற்றுவிக்கப்பட்டது.
ஆண்களுக்கு, வாய் மற்ற பாகங்களில் உள்ள கட்டிகள், விதைப்பை கட்டி, ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்து, பல்வேறு சந்தேகங்களுக்கு சங்கரா மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். இதில், 317 பேர் பங்கேற்றனர்.
முகாமில், மருத்துவனை மேனேஜிங் டிரஸ்டி விஸ்வநாதன், சி.இ.ஓ., விஜயலக்ஷ்மி, மருத்துவர் ரிச்சர்ட், டிரஸ்டி ஸ்ரீராம், மேலாளர் நந்தகுமர் உள்ளிடோர் பங்கேற்றனர்.



