காஞ்சிபுரத்தில் நகைகள் மற்றும் அடமான வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான ஹால்மார்க் விழிப்புணர்வு கூட்டம்
காஞ்சிபுரத்தில் நகைகள் மற்றும் அடமான வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான ஹால்மார்க் விழிப்புணர்வு கூட்டம் LNK பேலஸ் கூட்டரங்கில் நடைபெற்றது .

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய சன்னதி தெருவில் அமைந்துள்ள எல்.என்.கே .பேலஸ் கூட்ட அரங்கில் இந்திய தரத்துறை வேண்டுகோலின் பேரில் காஞ்சிபுரத்தில் உள்ள நகைகள் மற்றும் அடமான வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான ஹால்மார்க் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சங்கத் தலைவர் மோகன்லால் தலைமை தாங்கினார். செயலாளர் பி.டி. லஷ்மண குப்தா வரவேற்புரை ஆற்றினார். இதில் இந்திய தரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் வியாபாரிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் பொருளாளர் எம் ஜி ராமச்சந்திரன் நன்றிகளை தெரிவித்தார்.


