காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்க பொதுக்குழு கூட்டம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் சிறப்பாக செய்திட வேண்டி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் எம் மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கௌரவ தலைவர் கங்காதரன் பொதுச் செயலாளர் சிவாஜி, முன்னாள் செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சங்க வரவு செலவு சரிபார்த்தல், அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில் யானை வாகன உற்சவம் சம்பந்தமாக ஆலோசனை, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை பெறுதல், புதுப்பித்தல், ஆண்டு சந்தா செலுத்துதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் பேசும்போது, “அனைத்து உறுப்பினர்களும், சங்க நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், அனைத்து கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டு சங்கத்திற்கு வலு சேர்க்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

மேலும் “யானை வாகன உற்சவம் சிறப்பாக நடைபெற அனைத்து சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் நேரில் ஆஜராகி ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்.
சங்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பொருளாளர் ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்தார்.

