காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகள்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகள்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு பணிகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மின் மாற்றி அங்கன்வாடி கட்டிடம் ஆகியவை திறந்து வைத்தார்.

மேலும் மாணவ மாணவிகளின் படிப்பில் அக்கறை கொண்டு மாவட்ட அறிவிப்பு சார் மையத்தில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை காற்றுடன் கூடிய படிப்பு வசதி கொண்ட கட்டிட பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அறிவுசார் மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர்க்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் தனலட்சுமி, கீதா, விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், பகுதி செயலாளர் திலகர், துணைச் செயலாளர், வழக்கறிஞர் வினோத்குமார், எழில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *