காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி
காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாய் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 47 ஆம் ஆண்டு நவராத்திரி அலங்கார திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் அனுதினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அந்த வகையில் 12ம் நாள் அம்பாள் கி வீர மாகாளியம்மன் விஸ்வரூப அலங்காரம் எனும் மகிஷாசுர மத்திமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு தூபதீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி அருளை பெற்று சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஶ்ரீ காஞ்சி நவரச நிறுத்தியா லையா நடனப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகர்த்தா கலைமணி. எம் .ஜி. வடிவேல் ஆலய பொது சங்க தலைவர் மாஸ்டர் கிருஷ்ணா மற்றும் பிரதர்ஸ் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வணங்கி அருளை பெற்று சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

