காஞ்சிபுரம் பல்லவன் கல்வி குழும பொறியியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம் பல்லவன் கல்வி குழுமத்தின் அங்கமான காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு திறன்மிகு மாணவர்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் பல்லவன் பொறியியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் தாளாளருமான பா.போஸ் தலைமை தாங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் புதுதில்லி, அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழு தலைவரின், ஒழுங்கு முறை பிரிவு ஆலோசகர் பேராசிரியர் மோரிராமுலு கலந்து கொண்டு பல்லவன் பொறியியல் கல்லூரியில் 7- பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 527 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது, “மோரிராமுலு, ஏழைபுற கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்லவன் கல்வி குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களின் தொடர் திறன் வளர்ச்சி பங்கே அவர்களை செழுமைப்படுத்தும் எனவும், சந்திராயன் திட்டத்தில் எந்த ஒரு ஐஐடி,என்ஐடி, மாணவர்களோ இல்லை என்பதும் கிராமப்புற மாணவர்களின் பங்கு அதிகம் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பல்லவன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஜெயபெருமாள் போஸ், இயக்குனர்கள் ஜானகி புருஷோத்தமன், கன்னிகா பரமேஸ்வரி போஸ், எத்திராஜ் கோவிந்தராஜ், கிருஷ்ணன், மஞ்சுளா சிவ சண்முகம், கல்லூரி முதல்வர் பால்வண்ணன், பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

