காஞ்சிபுரத்தில் ராதா அம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசு வழங்கல்

காஞ்சிபுரத்தில் ராதா அம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசு வழங்கல்

காஞ்சிபுரத்தில் ராதா அம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கல்

பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு பொங்கல், வேஷ்டி வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் சாலை தெருவில் ராதா அம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

ராதா அம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பாஜக கூட்டுறவு பிரிவு ஊடக கோட்ட ஒருங்கிணைப்பாளர் காஞ்சி வி. ஜீவானந்தம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், 2-வது வார்டு கிளைத் தலைவர்களுக்கு வேஷ்டி மற்றும் இனிப்பு பொங்கல் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் தனாலட்சுமி, பொதுச் செயலாளர்கள் கேசவன், தியாகு, மாவட்ட தன்னார்வ தொண்டு பிரிவு செயலாளர் யுவராஜ், கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் ராதா அம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கல்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *