காஞ்சிபுரம் : கிருபானந்த வாரியார் மகா குருபூஜை விழா

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு 32வது மகா குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னியம்மன் ஆலய வளாகத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை அன்னதான அறக்கட்டளை சார்பில் 32வது மகா குருபூஜை விமர்சையாக நடைபெற்றது.
இதில் காலை கிருபானந்த வாரியார் திரு உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வண்ண வாசனை மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதில் பல்வேறு ஆன்மீக ஆன்றோர்களின் சுபன்யாசமும் நடைபெற்றது. தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் குருபூஜை அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

