காஞ்சிபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், கணினி பணியாளர்கள் அவற்றின் கீழ் இயங்கி வரும் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளர்கள் கணினி பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடை சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆகியோர் சந்தித்தவரும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சங்கம், ஓய்வு பெற்ற பணியாளர் சங்கம் சார்பிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 7. 10. 2025 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் சேரன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர், கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பும் வகையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் வாசுதேவன், முகுந்தன், இணைச் செயலாளர்கள் இளங்கோ, கண்ணபிரான், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர் சங்க பொருளாளர் மஞ்சுநாதன், துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

