காஞ்சிபுரத்தில் சீரமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிரந்த நிலத் தரகர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர் பி குமார் தலைமையில் சீரமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நல சங்க அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆக்டர். பி. குமார் தலைமையில் நிர்வாக சீரமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, மாநில அமைப்பாளர் எஸ் கே ராஜா, மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் வடிவேல், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் பார்டர் பெருமாள், உமாபதி ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் பொதுச் செயலாளர் உமேஷ், செயலாளர் பழனி பொருளாளர் ஜெயராம், துணைத் தலைவர்கள் கிரி பிரசாத், சுகுமார், துணைச்செயலாளர்கள் அரவிந்த், மணிகண்டன், இணைச்செயலாளர் மோகனா சந்தானம், செயற்குழு தலைவர் மனோகரன், சட்ட ஆலோசகர் பிரபாகரன், ஐ டி.விங், தீபா பார்த்திபன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வரலட்சுமி குமரவேல், உஷா பிரகாஷ், வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் பழனி, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் சிவன் கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் சக்தி, ஏழுமலை சீனிவாசன், ஹோட்டல் ரவி, சுரேஷ், ஜானகி, செல்வி உள்ளிட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சங்கம் வளர்ச்சி குறித்தும் ஒற்றுமைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முன்னதாக கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்கும் விதமாக கதர் ஆடைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

