காஞ்சிபுரத்தில் “ஸ்தோத்ரத்வனி” குழுவின் 5-ம் ஆண்டு சங்கம நிகழ்வு
காஞ்சிபுரத்தில், “ஸ்தோத்ரத்வனி” குழுவின் 5 ஆம் ஆண்டு சங்கம நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன் குரு ஸ்ரீமதி லதா பாலச்சந்தர் அவர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆன்மீக பக்தர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையாக இலவசமாக ஸ்லோகங்களை கற்றுத் தருகிறார்.
குரு வருகையுடன் கோலாகலமாக இனிதே ஆரம்பித்த நிகழ்வு பஞ்ச பூஜைகளுடனும் அனைத்து கடவுள்களின் ஸ்லோகங்களுடனும் ஆன்மீக ஒளிமயமானது. பிற்பகுதியில் லலிதா சஹஸ்ரநாமாவளியால் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
நினைவு பரிசுகள் வழங்கியும் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பின் களைகட்டியது. கோலாட்ட நிகழ்வு, பல்வேறு வயதினரும் ஆடிக் களித்தனர்.
அனைவரும் குருவின் கரத்தால் தாம்பூலம் பெற்று, மதிய விருந்தை வயிறார உண்டு, பின் குருவை வணங்கி விடைபெற்றனர்.

