காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மையம்

காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மையம்

காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்புரை அறுவை சிகிச்சை மையத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் L & T valves தலைமை நிர்வாகி திரு.S.வெங்கடேஷ் அவர்கள் திறந்து வைத்தனர்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் சுமார் 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்புரை அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் தலைமை நிர்வாகி திரு.S.வெங்கடேஷ் அவர்கள் திறந்து வைத்தனர்.

மேலும் விழாவை துவக்கி வைத்து பின்னர் பேசியபொழுது, “அனைவரும் பிறர்க்கு உதவியாக வாழவேண்டும் மற்றும் பிறருக்கு எந்த விதமான தீங்கும் இன்றி வாழவேண்டும்” என்று கூறினார்.

பின்னர் மக்கள் அனைவரும் இம்மருத்துவமனையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும், இதுபோன்ற தொழிற்சாலைகள் சமூகத்திற்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் எனவும் கூறினார்.

மேலும் இதில் மேனேஜிங் டிரஸ்டி திரு.விஸ்வநாதன், பணி ஓய்வுபெற்ற விங் கமாண்டர் சங்கர், திரு.ஈஸ்வர், மருத்துவமனையின் தலைமை அலுவலர் திருமதி.விஜயலட்சுமி, டிரஸ்டி.திரு.ஸ்ரீராம் மற்றும் மருத்துவமனையின் செயல் அதிகாரி திரு.நந்தகுமார் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் L & T valves தலைமை நிர்வாகி திரு.S.வெங்கடேஷ், பிளான்ட் ஆலை தலைமை அதிகாரி திரு.கிருஷ்ணகுமார், HR ஸ்ரீஹரி மற்றும் பொதுமக்கள், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *