காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பிச்சாவரம் மற்றும் மாவிளக்கு பூஜை
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரமௌலீஸ்வரர் காக சிறப்பு பிச்சாவரம் மற்றும் மாவிளக்கு பூஜை வாசிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பெங்களூரை சேர்ந்த வாசிக நிரந்தர சுபாஷினி பிக்ஷா வந்தனம் சார்பில் சந்திரமௌலீஸ்வரருக்கு சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடன் பிக் ஷா வந்தனம் நடைபெற்றது.
இதில் சைலஜா ஜெய்சங்கர் தளபதி தலைமையில் குழுவினர் அனைவரும் வரிசை தட்டுகள் எடுத்து மகா பெரியவர் பிருந்தாவனத்தினை வலம் வந்து சந்திரமௌலீஸ்வரருக்கு சமர்ப்பித்தனர்.
இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மாவிளக்கு ஏற்றி பிட்சா வந்தனம் சமர்ப்பிக்கும் சேவையினை இந்த அமைப்பு மட்டுமே நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


