காஞ்சிபுரம் சந்திர மடத்தில் இளைய பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்!

யானை வாகனத்தில் வலம் வந்த ஏகாம்பரநாதர் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் அனுதினமும் ஏகாம்பரநாதர் பல்வேறு வாகனங்களில் ராஜவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் கடைசி உற்சவம் ஆன யானை வாகன உற்சவம் காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்கம் சார்பில் விமர்சையாக நடைபெற்றது. இதில் காலை சிறப்பு வரிசை எடுத்து வரப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் ராஜவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சங்கர மடம் முன்பு எழுந்தருளிய சுவாமியை சந்திர மடத்தில் இளைய பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர என்ற சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். இவருக்கு மின் தொழிலாளர் சங்கம் பொன்னாடைகள் சமர்ப்பித்து ஆசி பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் மலர் மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்று சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆர் எஸ் எம் பேக்கரி சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டம் மின் தொழிலாளர் நல நிர்வாகிகள் காஞ்சி ஜீவானந்தம் மூர்த்தி, சிவாஜி, சாரநாதன், சம்பத், பழனி, கருணாகரன், கோபி, கேபிள் கங்காதரன், ரஜினிகாந்த், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக செய்திருந்தனர்.

இவ்விழாவை ஒட்டி கச்சபேஸ்வரர்ஆலயம் அருகில் திரைப்பட பின்னணி பாடகர்களின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் சங்க கௌரவ தலைவர் காஞ்சி ஜீவானந்தம் கதர் ஆடைகளை அணிவித்து நன்றிகளை தெரிவித்தார்.

