தமிழ்நாடு SC/ST அலுவலர் நலன் மற்றும் சமூக வழிகாட்டுதல் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

தமிழ்நாடு எஸ்சி எஸ்டி அலுவலர் நலன் மற்றும் சமூக வழிகாட்டுதல் சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாடு எஸ்சி எஸ்டி அலுவலர் நலன் மற்றும் சமூக வழிகாட்டுதல் சங்கம் சார்பில் ரயில்வே சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அன்னாரது நினைவு நாளை ஒட்டி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட பொருளாளர் ஏகாம்பரம், மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன், வட்டத் தலைவர் குமார், வட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி தமிழரசி, வட்ட பொறுப்பாளர்கள் திருவேங்கடம், சதாசிவம், முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவேல், முன்னாள் மாவட்ட பொருளாளர் துரை, முன்னாள் வட்டத் தலைவர் முத்து, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் காளிங்கராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஜெய்சிங், வெங்கடேசன், முரளி, வரதன், மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



